சீறிப் பாய்கிறாய், எனைக் கண்டு ஓடி ஒளிகிறாய்,
ஊரில் உலகிலே நம்மைப் போல் யார் உளர் என் அன்பே?
வேரில் வெந்நீரை நீயும் ஊற்றிச் செல்லாதே
நாறிப் போய்விடும் பொழப்பு நாற்றம் கொண்டிடும்!
காலன் நம்மிடம் நெருங்கும் காலம் உள்ளவரை
ஆலவிழுது போல் நம் காதல் தழைத்தே ஓங்கிடும்!
காலம்கடக்கலாம் தலையில் நரைகள் தோன்றலாம்-மிக
ஆழமானது எனில் நம் காதல் தானது!
நீ சோகம் கொள்கையில் நான் ஆறுதல் தந்திடுவேன்
பூப்போல உன்னையே என்நெஞ்சில் தாங்குவேன்!
தீப் பட்ட இடத்திலே நான் தேனைத் தடவுவேன்,
பா மாலை பாடியே ஒரு தாய் போல் மாறுவேன்!
ஒரு ராஜா மகனாக நீ உலகாளும் வரம் வேண்டும்,
இரு ரோஜா மலர் போல நாம் மணத்தைத் தர வேண்டும்!
கருவிழியாள் அன்புக்கு தலை குனிந்திட வேண்டுமடா
சிறு குழந்தை போல் என்றும் எனைச் சுற்றிட வேண்டுமடா!
அந்த, உலகத்திலே நம்மையன்றி யாருமில்லை,
எந்த கவலையுமே அங்கு இல்லை இல்லையில்லை!
பந்தம் பாசமெல்லாம் நம் இருவர் இடையே தான்
உந்தன்மடி சாய நாம் சொர்க்கம் காண்போமே!!
-சுமஜ்லா
என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment