என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Thursday, July 30, 2009

கவிதைப் போர்

நான் எழுதிய கவிதையெனும் சிறுகத்திக்கு எதிராக கூரம்பு வீசிவிட்டார் தம்பி ஷபி! போரிடவெல்லாம் நமக்கு தெம்பில்லை! ஆனால், தடுக்க ஒரு கேடயமாவது வேண்டாமா?

இதோ நானெழுதிய முதல் கவிதை:

பிரயத்தனம்
நீ கோபமாய் இருப்பதை
எனக்குக் காட்ட
பகீரத பிரயத்தனம் செய்வது
புரிகிறது புருஷா!

தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட‘செல்’லை
விட்டு செல்வதும்,....மேலும் படிக்க....

தம்பி ஷஃபி வீசிய கூராயுதம்:

<> 'ம்' என்றால்..
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்போ இது வேறாம்.

உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன்
கடலை கறியும் கடலாய் மாறியது!!... மேலும் படிக்க...

இதோ மீண்டும் என் தற்காப்புக் கேடயம்:

ஏன் இப்படி?

படுக்கையறையில் ஆங்காங்கே வட்டக்கோலம்-
நீ கழட்டிப்போட்ட கைலி!!!

ஏனென்று கேட்டால்,
“அது என்ன பண்ணியும் வட்டமாத்தான் வருது!”

கட்டில் கம்பிக்கு திரையாய் மாறியது-
நீ துவட்டிப் போட்ட துண்டு!!!

ஏனென்று கேட்டால்,
“சரி, இனி முந்தனையே போதும், துண்டு வேண்டாம்!”

கரைந்த சோப்பு சொல்லாமல் சொல்லுது,
தரையில் மீனான ரகசியம்!!!

ஏனென்று கேட்டால்,
“சினூண்டு சோப்புல நீ ஏன் கஷ்டப்படணும் பாவம்!”

‘நல்லா இருக்கா?’ ஆர்வமாய் சாப்பிடும் போது கேட்க,
‘நல்லாத்தான் இருக்கு!’ சலிப்பான பதில்!!!

ஏனென்று கேட்டால்,
“என்ன கேட்ட? சமையலையா?”

சுட்ட தின்ற தோசை ஜீரணமாகி இருக்கும்;
மிச்ச மாவில் விழுந்த பல்லியும் மோட்சமாகியிருக்கும்!

ஏனென்று கேட்க,
“என்ன செய்யுறது? அதுக்கு ஆயுசு முடிஞ்சு போச்சு!”

மிச்சமிருப்பது கரண்டியும் சட்டியும் தீசல்களும்
நானே சுட்டுத் தின்றேன் என்ற பெருமிதமும்!

ஏனென்று கேட்க,
“சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!!”

சிரிக்காமல், சிரிக்கவைக்கும் தந்திரம்;
கோபத்தை மாற்ற நீ போடும் மந்திரம்!

எல்லாமே இப்படி, நாங்கள் அருகிலிருந்தால்,
ஆனால்,
ஊருக்குப் போய் திரும்பும் நாளன்று,
எல்லாமே ஒழுங்காக இருப்பது மட்டும் எப்படி?!

-சுமஜ்லா.

No comments:

Post a Comment

******************************