என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Monday, April 13, 2009

இளமையின் முத்திரை

புதிய மாறுதல்கள் வரவிருக்கின்றது
பூபாள ராகம் தொடங்குகின்றது
பெண்மை பொலிவு பெருகின்றது
கண்ணிமை கனவைத் தொடுகின்றது

இன்ப உணர்ச்சிதான் காரணமா?
வானவில் வர்ணத்தில் தோரணமா?
மனதில் புகுந்து ஆசைக் குயில்கள்
இசைத்து மகிழும் நாயனமா?

அறிமுகமாகும் புதிய பந்தம்
அழிந்திடாத மனதிற்கு சொந்தம்
கதுப்புகள் சிவக்க உடலும் சிலிர்க்க
ஆரம்பமாகும் இளைய வசந்தம்

இளமை வழங்கிய இனிய முத்திரை
கண்கள் நான்கும் மறந்திடும் நித்திரை
அந்தி பொழுது மலரும் மல்லிகை
அங்கே வந்து சொல்லும் வாழ்த்துரை

சூடப்படுமொரு சுகமான வாகை
தோல்வி கண்டு துவளும் தோகை
உணர்ச்சிக் கலவை உள்ளம் வருட
பூரிப்பில் முகத்தில் நாண ரேகை

உள்ளம் விட்டு நீங்கியது வாட்டம்
உறவில் மலர்ந்த உணர்வில் கொண்டாட்டம்
இன்பம் பகிர்ந்து எழுந்து தாலாட்டும்
இனம் புரியாத எண்ணவோட்டம்

இதயத் துடிப்பில் ஆடிடும் நடனம்
எண்ணச்சிறகில் ஏறிடும் பயணம்
முடிவில்லாத உதயங்கள் நோக்கி
மதிவதனத்தின் காலடி சரணம்.

எழுத எழுத என் கவிதை வளரும்
நீலவொளியில் நிலவு மலரும்
சீராய் பரவிடும் சிந்தனை போலே
இன்ப உணர்வு என்றும் தொடரும்.

-சுமஜ்லா

2 comments:

Subash said...

really nice
வாழ்த்துக்கள்

suhaina said...

Thank You subash, for your comments.

Post a Comment

******************************