பாசமலர் பூவிலே
பனிபடர்ந்த மலையிலே
நேசம் கொண்ட உறவிலே
நாளும் உந்தன் நினைப்பிலே
பச்சைக் கிளியின் மொழியிலே
கூவும் குயிலின் ஒளியிலே
இச்சை கொண்ட பார்வையே
யாவும் யாவும் இனிமையே
மச்சான் உந்தன் முகத்திலே
வழியும் அந்த எழிலயே
மிச்சம் மீதி இல்லாமல்
ரசிக்க மனது இனிக்குதே
கண்ணா உந்தன் குரலுமே
கவிதையாக தெரியுதே
மின்னல் போன்ற சிரிப்பென்னை
பித்துப் பிடிக்க வைக்குதே
நெஞ்சில் சாய கனவுகள்
மேலே மேலே போகுதே
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
பற்றிக் கொள்ளப் போகுதே
நீயும் நானும் ஒன்னுதான்
பூவும் மலரும் ஒன்னுதான்
வாழ்வின் இனிமை காதல் தான்
வாழ்ந்து காட்டி ஜெயிப்பமே.
சுமஜ்லா
என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment