என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Saturday, April 11, 2009

என் கனவினில் வந்தவன்

என் கனவினில் கவியாக வந்தாய்
என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய்

வான் வெளியிலே நிலவாக வந்தாய்
தேன் துளியதன் சுவையொன்று தந்தாய்

என் மடியினில் துயில் கொள்ள வந்தாய்
உன் மொழியினில் தேன் கலந்து தந்தாய்

மா மனிதனாக என் மனதை கவர்ந்தாய்
பூ மனத்தை வீசி என்னை கவர்ந்து இழுத்தாய்

சாய்ந்த என்னை தோளில் தாங்கி அணைத்தாய்
காய்த்து கனிந்து சுவைக்க இசைய பறித்தாய்

பூத்துக் குலுங்கும் பூவும் காதல் கொள்ளும்
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்

விழிகள் பேசும் கதைகள் கோடி கண்ணா
துளிகள் சேர்ந்து வெள்ளமாகும் மன்னா

இளம் பிறையுமங்கு பௌர்ணமியாய் மாறும்
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்

சுமஜ்லா

No comments:

Post a Comment

******************************