என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Friday, March 13, 2009

இளமையின் இனிமைகள்



புவிதரும் இனிமைகள் தனைத் துறந்தேன் - ஒரு
கவிதையின் வரியினில் எனை மறந்தேன்.
செவிசுவை சொற்சுவை பொருட்சுவையும் - நிறை
கவிசுவை கடல்தனில் கலந்திருந்தேன்.

பலபல நினைவுகள் மனதினிலே - அதை
'மள மள' வென்றே எழுதி விட்டேன்.
இளமையும் முடிந்திடும் முன்பாக - அதன்
இயல்புகள் இனிமைகள் பதிவு செய்தேன்.

கோடி கோடி சொற்களிலே - நான்
தேடி எடுத்த சில சொற்கள்.
நாடி நரம்புகள் சிலிர்த்திடவே - இன்று
பாடி மகிழ்ந்தேன் பூங்கவிதை.

தேடலின் தவிப்புகள் எழுத்தாச்சு - எம்
ஊடலும் கூடலும் கவியாச்சு!
வாடலும் அதன் பின் காதலுமே - ஒரு
பாடலாய் இன்று உருவாச்சு!!!

சுமஜ்லா

6 comments:

Anonymous said...

ஆஹா..சூப்பர் சுஹைனா(ஏதோ super man மாதிரி rhyme ஆகுதா..ஹிஹி)

Anonymous said...

அடுத்தவரை உற்சாகப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். தேங்க்ஸ்ப்பா.

Anonymous said...

சூப்பர் கவிதை, சுஹைனா. இப்போதான் உங்க கவிதைப் பக்கம் திரும்பினேன். நன்றாக இருக்கின்றது. அதுவும் உங்கள் குரலில் கேட்கும்பொழுது மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா

suhaina said...

thanks birundha. ipo holidays, adhaan, ennaal record panna mudiyala. kutties vitil iruppadhal epodhum ore sound.

sakthi said...

தேடலின் தவிப்புகள் எழுத்தாச்சு - எம்
ஊடலும் கூடலும் கவியாச்சு!
வாடலும் அதன் பின் காதலுமே - ஒரு
பாடலாய் இன்று உருவாச்சு!!!

superb thodarnthu eluthungal

SUMAZLA/சுமஜ்லா said...

thank you shakthi

Post a Comment

******************************