என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Thursday, July 30, 2009

கனவின் சிறகுகள்

பள்ளியிறுதி நாட்களிலே எழுதியது...

சிறகது வளர்ந்து சிந்தை மயங்கிப்
பறக்கத்துடிக்கும் பைங்கிளிகள்
பாடும் பாட்டில் பரவசமாகி
தேடும் ஆழ்ந்த உணர்வலைகள்.

நமக்கு நாமே வகுத்தபாதையில்
சுமப்போம் பழைய நினைவலைகள்
நினைவலை மிகுந்து ததும்பிநிற்பதால்
வினை மறந்திட்ட வேதனைகள்.

வேதனையனைத்தும் தாண்டிவந்திட்டால்
சோதனைவிரிக்கும் விதிவலைகள்
விந்தைகள் காண விழியிதழ்மூடிச்
சிந்தை மறந்த உறக்கங்கள்.

கனவுகள் நோக்கி சிறகுகள் விரித்து
நினைவுகள் நீங்கிய நித்திரைகள்.
உணர்வுகள்தொடரும் உறவுகள்மலரும்
மனக் கண் விழித்துத் துயிலெழுங்கள்.

மதிமுகம் பார்த்துக் கனவுகள்வளர்க்கும்
புதிர்கள் நிறைந்த பருவங்கள்
இனியெதைக் கண்டு இதயம் மகிழ்வோம்
இனி நாம் வேறு துருவங்கள்.

-சுமஜ்லா
******************************